Wednesday, 19 February 2014

Numerological Meaning of kaviyarasan:

Numerological Meaning of kaviyarasan:
 People with this name tend to be very active. They love to travel and hate to sit around in the same spot for too long. They are bold, daring, and persuasive. They love to try new things and take chances. Professionally, they can be successful as a public figure, in the media, or at developing new ideas for small businesses.

50 reasons


Tuesday, 18 February 2014

Veeramangai velu naachiyar

வீரமங்கை வேலு நாச்சியார்

நமது பாரத நாடு ஆங்கில ஆளுமையின்கீழ் அடிமைப் பட்டுக் கிடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் 1857 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் மீரட் நகரத்தில் தோன்றிய சிப்பாய்க் கழகத்தின் மூலமாக முதல் இந்திய விடுதலைப் போராட்டம் துவங்கியது .1858 ஆம் ஆண்டில் ஜான்சி ராணி என்றழைக்கப்பட்ட ‘ராணி லக்ஷ்மி பாய்’ ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்து தானே போர்க்களம் புகுந்து போர்புரிந்து வரலாற்றில் இடம் பிடித்தாள்.

இதுதான் நாம் படித்த வரலாறு. இந்த வரலாறு உண்மைதான். ஆனால் சில உண்மைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

இவை அத்தனையும் நடப்பதற்கு 77 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆண் வேடம் தரித்து வாளெடுத்துப் போர் புரிந்த ஒரு தமிழச்சியின் வீர வரலாறு மறைக்கப் பட்டது.
ஆங்கிலேயரின் ஆளுமையை எதிர்த்து துடித்தெழுந்த நம் தமிழரின் முதல் விடுதலைப் போராட்ட வரலாறு மறக்கப்பட்டது.

தன் உடலை எரியூட்டிக்கொண்டு வெடிமருந்துக் கிடங்கினுள் புகுந்து அதை அழித்து ஆங்கிலப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய அனேகமாக உலகத்தின் முதல் பெண் தற்கொலைப் போராளியின் அடையாளம் அழிக்கப்பட்டது.
— in Sivagangai.

Sunday, 16 February 2014

About us

நம் உடலை அறிவோம்

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நான் அறிந்த விற்பனை வெற்றியாளர்கள்

நான் அறிந்த விற்பனை வெற்றியாளர்கள்

ஜெனின் ஜோஸ்:

இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்தவர். தற்போது திருநெல்வேலியில் சொந்த தொழில் செய்து வருகிறார். இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகவும் துடிப்பான, பெரும் கனவு கொண்ட இளைஞர்.
இவர் செய்த சாதனை என்னை இன்றும் வியக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இவர் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். மிக குறுகிய காலத்தில் கிளை மேலாளராக பதவி உயர்வு பெற்று மார்த்தாண்டம் என்ற ஊரில் பணியமர்த்தப்பட்டார்.
அவர் பதவி ஏற்றதும், உடனடியாக அணைத்து பணியிடங்களையும் நிரப்பினார். பின்னர் முகவர் சேர்கை நடைபெற்றது. ஒரே மூச்சில் 105 முகவர்களை சேர்த்து அவர்களை தகுதி பெறச் செய்தார். பின்னர் கிளை வணிகம் துவக்கும் ஒரு நாளை தேர்வு செய்து, வணிகம் துவங்கும் முதல் நானில் ஐம்பது லட்சம் பிரிமியம் வசூல் செய்யும் இலக்கை செய்தார். அந்த நாளுக்கு சற்று முன்னரே அவர் இலக்கை நெருங்குவது தெரிந்ததும், தன்னுடைய இலக்கை ஐம்பது லட்சத்தில் இருந்து ஒரு கோடிக்கு உயர்த்தினார்.
ஒரு புது கிளை துவங்கும் முதல் நாள் வணிகம் ஒரு கோடி பிரிமியம் என்பது எப்படிப்பட்ட சாதனை என்பது, ஆயுள் காப்பீட்டுத் துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரையில் ஒருவரும் இந்த சாதனையை செய்யவில்லை.
நாட்கள் நெருங்கியது. வணிகம் துவங்கியது. தான் திட்டமிட்டபடியே ஒரு கோடி பிரிமியம் செலுத்தி ஒரு அற்புதமான சாதனை படைத்தார். இந்த இலக்கினாலும், சாதனையினாலும், யாருக்கெல்லாம் என்ன லாபம் கிடைத்தது என்பதுதான் இங்கு முக்கியம்.
·         அவர் விற்பனை அதிகாரிகள் பத்துப் பேறும் அவர்களது பதவி உறுதிசெய்யும் வணிகத்தை முதல் நாளிலேயே முடித்து இருந்தனர். சம்பள உயர்வும் முதல் நாள் முதலே அடைந்தனர்.
·         அனைத்து முகவர்களும் சேர்ந்து முதல் நாள் வணிகம் மூலம் சுமார் முப்பத்து ஐந்து லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றார்கள்.
·         சில நூறு வாடிக்கையாளர்கள் காப்பீடு பெற்றார்கள்.
நமக்கான பாடம்: பெரிய இலக்கும், சரியான திட்டமிடுதலும், தெளிவான தலைமையும் அமையப் பெற்றால், உலகம் உம்மை திரும்பிப் பார்க்கும்.

குகன் பொன்னம்பலம்:
இலங்கையில் வணிக மேலாண்மை பட்டம் பெற்று, வாழ்வாதாரத்திற்கு, 2004ம் வருடம் கனடா நாட்டிற்கு குடி பெயர்ந்தார்.
அங்கு ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் தொலைபேசி அழைப்பாளராக பணியமர்ந்தார்.
காப்பீட்டு வணிக வருமான வாய்ப்பை தெரிந்துகொண்டு, முகவராக மாறினார்.
தன்னுடைய தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய அயராத உழைப்பால் இன்று ஐந்தாயிரம் வாடிக்கையாளர்களுடன், ராயல் பேங்க் ஆப் கனடாவில் ஒரு பிளாட்டினம் முகவராக உள்ளார்.
தற்போது விலை உயர்ந்த சொகுசு கார், இரண்டு சொந்த வீடுகள் கனடாவில் என்று நல்ல வசதியில் இருக்கிறார்.
இவர் என்னுடைய பயிற்சி வீடியோவை வலைதளத்தில் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து நண்பரானார். தினந்தோறும் நாங்கள் உரையாடும் பொது, இவருக்கு இருக்கும் உற்சாகம் மற்றும் விற்கும் தொழில் மீது இவருக்கு இருக்கும் தீரா காதல், மேலும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துகிறது.
இவருடைய பொழுது போக்கு எல்லாமே புத்தகம், பயிற்சி சொற்பொழிவு கேட்பது, வணிகம் பற்றி சிந்திப்பது என்றே ஆகிவிட்டது. சினிமா, தேவையற்ற நண்பர்கள், தேவையற்ற பழக்கம் ஏதும் இவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
நமக்குப் பாடம்: “கவனச் சிதறல் அற்ற, முற்போக்குச் சிந்தனையுடன், அயராது ஒருவன் உழைத்தால், எவரும் அவருடைய வாழ்வை மாற்றி அமைக்கலாம்”

மைக்ரோ லாப்ஸ் ரமணி:

நான் இவரைப்பற்றி கேள்விப்பட்டு, இவரின் தொலைபேசி எண்னை என் நண்பர் மூலம் பெற்று உரையாடினேன். மிகவும் ஆச்சர்யத்தில் என்னை ஆழ்த்திய நபர்களுள் இவரும் ஒருவர்.
மைக்ரோ லாப்ஸ் என்ற நிறுவனத்தில் சிறு வயதில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து பணியாற்றினார். இவர்தான் அந்த நிறுவனத்தின் சேலம் மாவட்டத்தின் முதல் பிரதிநிதி. இவர் பூஜ்யத்தில்தான் வியாபாரத்தை துவங்கினார்.
தனது அயராத உழைப்பால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மொத்த வணிகத்தை விட, இவரது ஒருவருடைய வணிகம் பல வருடங்கள் அதிகமாக இருக்குமாம். அப்படியானால் அவருடைய வருமானமும் உச்சத்தில் தான் இருந்திருக்கும்.
இவர் மிக குறைந்த நாட்களே விடுப்பு எடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் அதே நிறுவனத்தில் பணியாற்றினார். இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. இவரது அன்றாட வேலை என்னை மலைக்க வைத்தது.
தினந்தோறும் மருத்துவர் மற்றும் மருந்துக்கடைகளை இவர் சந்திக்கும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? தினமும் சுமார் 28 நபர்களை அவர் சந்தித்துள்ளார். மாதம் தோறும் சுமார் 850 நபர்களை அவர் சந்தித்துள்ளார்.
இது மிகவும் அரிதான ஒரு எண்ணிக்கை. அவ்வளவு சாத்திதும், மிகவும் பணிவாக என்னிடம் உரையாற்றியது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.


நமக்குப் பாடம்: “தினந்தோறும் என்பது ஒரு மந்திரச்சொல். நமது வேலைகளை தொடர்ந்து கவனச்சிதறல் இன்றி செய்துவந்தால், நம்மை வெல்ல ஒருவராலும் இயலாது”.

மார்கெடிங் VS சேல்ஸ்

மார்கெடிங் VS சேல்ஸ்

மார்கெடிங் – சேல்ஸ் வித்தியாசம்.
பொதுவாக, நாம் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையையும் சேல்ஸ் என்ற வார்த்தையையும் ஒரே அர்த்தத்தோடு பயன்படுத்துகிறோம். ஆனால் இவை இரண்டும் வேறு.
மார்கெடிங் என்பதற்கு தமிழில் ஒரு அழகான வார்த்தை உண்டு. அது “சந்தைப்படுத்துதல்”. சந்தைப்படுத்துதலில் இரண்டு நிகழ்வுகள் உண்டு. அவை ‘தெரியப்படுத்துதல்’ மற்றும் ‘நினைவூட்டுதல்’. விளம்பரம் செய்தல் ஒரு மார்க்கெட்டிங் நிகழ்வு.
தெரியப்படுத்துதல்: விளம்பரம் மூலம் நமது பொருள் அல்லது சேவையைப் பற்றி நாம் வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தலாம். எங்கெல்லாம் நமது பொருள் அல்லது சேவை கிடைக்கும், அவற்றை எப்படி அடையலாம் என்பதையும் நாம் தெரியப்படுத்தலாம். மற்றுமொரு தெரியப்படுத்துதல் உக்தி, merchandaising என்பார்கள். அதற்கு, வாடிக்கையாளருக்கு கண்ணில் தெரியும்படி நமது பொருள் அல்லது சேவையை காட்சிப் படுத்துதல். இதற்காகத்தான் கடைகளில் பொருட்களை அழகுபடுத்தி காட்சிப்படுத்துவார்கள். இது வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
நினைவூட்டுதல்: இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு நிறைய விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று அவர்களை ஓட வைக்கிறது. அதில் நம்முடைய சேவை அல்லது பொருளைப் பற்றிய நினைவு அடித்துச் செல்லப்பட்டு அவர்களுடைய மூலையில் கிடப்பில் போடப்பட்டு விடுகிறது.
தொடர்ந்து விளம்பரம் செய்வது, நினைவூட்டுவதர்க்குத் தான். சில விளம்பரங்கள் துவக்கத்தில் அதிக நேரம் வரும். பின்னர் அவர்கள் விளம்பர நேரத்தை குறைத்துவிடுவார்கள். இது நினைவூட்டுதலுக்கு ஒரு நல்ல உதாரணம். ஏனென்றால், நாம் முன்னம் பார்த்த அல்லது கேட்ட அதே விளம்பரம் மூலம், நமக்கு அதில் வரும் வார்த்தை, குரல் அல்லது இசை தெரிந்து இருக்கும். அதில் ஒரு சிறு பகுதியை நாம் கேட்ட உடனேயே அந்த பொருள் அல்லது சேவை நினைவுக்கு வரும்.
சில உக்திகள்: (சுயதொழில் புரிபவர்களுக்கு)
தினம் ஒரு தகவல் என நீங்கள் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
வாரம் ஒரு தகவல் என நீங்கள் ஈமெயில் அனுப்பலாம்.
மாதம் ஒருமுறை செல்போனில் அழைத்து பேசலாம்
முக்கிய நாட்களில், (பிறந்த நாள், திருமணநாள், பண்டிகைநாள்) நேரிலோ, தொலைபேசியிலோ அழைத்து வாழ்த்து சொல்லலாம்.
புதிய பொருள் அல்லது சலுகைகள் வரும் சமயம் அவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
“எப்போதும் உங்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்பிலேயே இருங்கள்”
சேல்ஸ்: சேல்ஸ் என்பது விற்பனை. இது சந்தைப் படுத்துதலுக்கு அடுத்த செயல். அதாவது, தகவலை தெரிவித்த பின்னர், உங்கள் வாடிக்கையாளரை அணுகி, அவரிடம் உங்கள் பொருள் மற்றும் சேவையை விளக்கி அந்த பொருள் அல்லது சேவை அவருக்கு எவ்வாறு உதவும் அல்லது தேவை என்பதை விளக்கி, அவருக்கு அதை கொடுத்து, அதற்கு பதிலாக பணம் பெரும் நிகழ்வே விற்பனை.

இதில் எங்கு குழப்பம் வரும் என்றால், சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனைக்கான வித்தியாசம் தெரியாமல் ஏதாவது ஒன்றை மட்டுமே நாம் தொடர்ந்து செய்வதன் மூலம் நமக்கு பலன் முழுவதும் கிடைக்காது. இதனாலேய பல தொழில்கள் வெற்றி அடைவதில்லை. இரண்டையுமே தொடர்ந்து செய்வதுதான் ஒரு சிறந்த வழி.

To be a winner

தீவிர ஆசை, விடாமுயற்சி, அயராத உழைப்பு மற்றும் சரியான தேர்வு - இவை அனைத்தும் சேர்ந்தால், அனைவரும் வெற்றியாளர் தானே?

MBA INFORMATION

FOR ALL MBA STUDENTS:
பல நேரங்களில் நமக்கு நடக்கும் ஒரு விஷயம் அல்லது ஒருவர் நம்மிடம் நடந்துகொள்ளும் விதம் நமக்கு புலப்படாமலேயே இருக்கும். அது குழப்பமாகவோ, ஆச்சரியமாகவோ இருக்கும். பலநேரங்களில், வடிவேலுவைப் போல "எங்க இருந்துதான் கெளம்புராய்ய்ங்களோ தெரியலையே" என்று நாமும் புலம்ப வேண்டிவரும்.

ஒருமுறை, விர்ஜின் அட்லாண்டா விமானத்தில் பணியாளர் ஒருவர் என்னிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார். எனக்கு காரணம் புரியவில்லை. பின்னர் அவரே வருந்தும் வகையில், அவர் தெரியாமல் என்பேண்டில் சில துளிகள் ஜூசை கொட்டிவிட்டு என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு புது பேன்ட்டை கொடுத்து மன்னித்துக்கொள்ள வேண்டினார்.

அவர் கொடுத்த கால் சட்டையை  மறுத்துவிட்டு, அவர் ஆரம்பம் முதலே என்னிடம் கறாராக நடந்து கொண்டது எதனால் என்று மட்டும் கூறும்படி கேட்டேன். எங்கள் குழுவில் இருப்பவர்கள் அடிக்கடி பணிப்பெண்களை போட்டோ எடுக்கிறார்கள் அது தவறு என்று கூறினார். அதனால் தான் அப்படி நடந்து கொண்டதாகவும் சொன்னார். மற்றவர் அப்படிச் செய்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? (சத்தியமா நான் போட்டோ எடுக்கலீங்க)

இப்படித்தான் நாம் காரணமே தெரியாமல் தலையை சொரிந்துகொள்வோம். இதுவும் ஒரு கயாஸ் தியரி மாதிரித்தான். "ஒரு பட்டாம் பூச்சியின் சிறகடிப்பிற்கும், ஒரு பூகம்பத்திற்கும் தொடர்பிருக்கும்".

இப்படி குழப்பமான நேரங்களில் நாம் அதன் காரணத்தை அறிய முற்பட்டால், நிச்சயம் குழம்பித்தான் போவோம். சரி, இதற்கும் வியாபாரத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?

இதன் சுருக்கம் "மதிப்புருவாக்கம்". ஒரு வியாபாரியோ விற்பனையாளரோ, தன்னைப்பற்றிய மதிப்புருவாக்கத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டே இருக்கிறார்.

நாம் செல்லும் இடங்கள், பழகும் மக்கள், உடுத்தும் உடை, வைத்திருக்கும் வாகனம், நம்மையும் நமது பொருட்களையும் பராமரிக்கும் முறை, வசிக்கும் இடம், இவை எல்லாம் நாம் சந்தித்து பேசத் துவங்கும் முன்னரே, நம்மைப்பற்றி ஒரு அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தி இருக்கும். இவ்வகையான அபிப்பிராயங்கள் நல்லதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருக்கலாம். எனவே கவனம் தேவை.

பல நேரங்களில் இப்படிப்பட்ட முத்திரைகள் நம்மீது குத்தப்பட்டு விடுவது சகஜம். நாம் நமது செயல்களின் மூலம் தொடர்ந்து இப்படிப்பட்ட மதிப்புருவாக்கத்தை செய்து கொண்டுதான் இருக்கிறோம். நம் மீது சமூகத்தின் பார்வை சரியாக இருக்கும்படி செய்தால்தான், நமது உழைப்பிற்கான முழு ஊதியமும் நமக்குக் கிடைக்கும். சிலருடைய ரிங்டோன், காலர்டியூன் கூட இந்த மதிப்புருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

பார்ப்பவர்களைக் குற்றம் சொல்லிப் பயனே இல்லை. நாம்தான் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும். என்னிடம் விற்பனை மேலாளராக இருந்த ஒருவர் நல்ல விற்பனையாளர். அவரின் வணிகம் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் அவரை நான் வேலைக்கு சேர்த்த சமயம், எனது அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் அவரைப்பற்றி ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். பல வருடங்களுக்கு முன்னால் அவர் ஒரு பொறுப்பற்ற இளைஞராக இருந்ததையும், போலீசில் அவர் பெயரில் ஈவ் டீசிங் கேஸ் இருந்ததையும் சொன்னார். அவர் வேலைக்கு சேர்ந்த சமயம், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தன. பல நேரங்களில் இந்த சமுதாயம் ஒருவர் திருந்த அனுமதிப்பதில்லை. முத்திரையை நிரந்தரமாகவே பச்சை குத்த நினைக்கும்.

எனக்கும் தேவையற்ற நட்பு, தேவையற்ற சங்கமம் எல்லாம் இருந்தன. இந்த லேப்ளிங் எனப்படும் மதிப்புருவாக்கத்தைப் பற்றி தெரிந்ததும். ஒவ்வொன்றாக சரி செய்துவிட்டேன். நான் முன்பொரு கட்டுரையில் எழுதியதைப் போல, எனக்கு புத்தகம் படிக்க மட்டும் நேரம் கிடைக்கவில்லை, புத்தகம் எழுதவே நேரம் கிடைத்தது.


"ஒவ்வொரு விற்பனையாளருக்கும், வியாபாரிக்கும், அவர் மீது சமூகத்தின் பார்வை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மிக அவசியம்"

Saturday, 15 February 2014

for god



தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்? எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்...

Rudhraksham

ருத்ரனின் அம்சமான ருத்ராட்சம், சிவபெரு மானின் திருநயனங்களில் இருந்து வீழ்ந்த விழிநீரின் அருள் வடிவமாகக் குறிப்பிடப்படுகிறது. மாமரத்தின் இலைகளைப் போன்று உள்ள ஒரு வகை மரத்தின், பசுமை கலந்த நீல நிறம் கொண்ட பழங்களின் உள்ளேயுள்ள விதைகளே ருத்ராட்சமாகும்.

நமது நாட்டில் வங்காளக் காடுகள், அசாம் காடுகள், ஹரித்வார், டேராடூன், நேபாளம், மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மைசூர் காடுகள், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ருத்ராட்சம் கிடைக்கிறது. இவை வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் இருந்தாலும், நாம் பரவலாகப் பார்க்கும் பழுப்பு நிறமானவையே (கருப்பின் மங்கிய வடிவம்) அதிகமாகக் கிடைக்கின்றன.

ஒரு மரத்தின் விதை வடிவம் என்பதையும் தாண்டி, அதில் பலவித சூட்சுமமான தெய்வீக சக்திகள் உள்ளன என்பதை பலர் தமது சுய அனுபவங்களிலும், பலர் தமது அறிவியல்பூர்வமான ஆய்வுகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொருவிதமான பயனைத் தரத்தக்க சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன.

* அதில் ஏக முகம் எனப்படும் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்றாகும். அது பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய, விலை மதிக்கமுடியாத ஒன்றாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த ஏக முகருத்ராட்சம்.

ஒரு உண்மையான ஏக முக ருத்ராட்சத்தை ஒரு படி அளவுள்ள ஏதாவதொரு தானியத்தின் அடியில் இட்டால், அது தானாகவே மேலே கிளம்பி வரக்கூடிய தன்மை பெற்றதாகும் என்று ஒரு ஆச்சரியமான தகவலை பழைய நூல் ஒன்று தெரிவிக்கிறது. ஒரு முக ருத்ராட்சம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரியது;

சகலவிதமான பித்ரு தோஷங்களையும் விலக்கி நல்வாழ் வளிக்கும் தன்மை பெற்றது. எல்லா நலன்களையும் தரக்கூடிய இந்த ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். சிவ மஹா புராணத்தில் ஒவ்வொரு வகை ருத்ராட்சங்களுக்கும் உரிய பீஜ மந்திரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இரு முகங்களைக் கொண்ட, த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கு உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவு முறைகளுக்குள் நல்ல, சுமூகமான போக்கு நிலவும். இது நவக் கிரகங்களில் சந்திரனுக்கு உரியதாகும். மனோகாரகனான, மாத்ருகாரகனான சந்திர பலம் ஒரு ஜாதகத்தில் மிக அவசியமானதாகும்.

மனம் எப்பொழுதும் சீரான நிலையிலிருக்க ஸ்திரத்தன்மை முக்கியம். மற்றவர்களோடு பழகும் தன்மையில் மேம்பட்டிருக்க வேண்டுமாயின் சந்திரனின் பலம் அவசியமாகிறது. மேலும் நமது உடலில் உள்ள நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதில் இருமுக ருத்ராட்சம் சிறப்பு வாய்ந்தது.

ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்து, மனோரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரமானது, ஓம் நம என்பதாகும்.

* மூன்று முகங்களைக்கொண்ட திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரியது. விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவிக்க விரும்புவோர் மும்முக ருத்ராட்சத்தை அணியலாம். இது மனதில் தைரியத்தையும், துணிவையும், தருவதோடு உடலியக்கங்களின் துடிப்பான செயல்திறனையும் மேம்படுத்தும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் ஆகியோரது சுய வளர்ச்சியையும் உயர்த்தும். சுறுசுறுப்பு குறைந்தவர்களும் இதையணிந்து பயன் பெறலாம். இதன் பீஜ மந்திரம், ஓம் க்லிம் நம என்பதாகும்.

* நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக ருத்ராட்சம், பிரம்மாவின் அம்சம் கொண்டது. நவக்கிரகங்களில் புதனுடைய அம்சத்தைப் பெற்றது. இதையணிவதால் சுவாசக் கோளாறுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். திக்குவாய் உள்ளவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிவதால், அவர்களது பேச்சுத்திறன் நிச்சயம் மேம்படும்.

கணிப்பொறித்துறையினர், மின்னியல் கருவிகள் சம்பந்தமான தொழில், அறிவியல் ஆய்வு சம்பந்தமான துறை, ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் இதை அணிவதால் நற்பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரம், ஓம் ஹ்ரீம் நம.

* பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக (ஐந்து முகம்) ருத்ராட்சம், சிவ அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் குரு பகவானின் அம்சம் பெற்றதோடு, ஆழ்ந்த கல்வியறிவையும், மனதின் சமநிலையையும் தரும் தன்மையைப் கொண்டது.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருத்துவ குணம், ரத்த அழுத்தம் சம்பந்தமான உடற்பிணிகளையும் நீக்கக்கூடிய தன்மையையும் பெற்றதாக இந்த ருத்ராட்சம் விளங்குகிறது. நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று அமைந்து காப்பாற்றக்கூடியது.

இது நமது மனோ உடலின் உயிரியல் தன்மையை ஒளிரவைக்கக்கூடிய காந்த ஆற்றலை உள்ளடக்கியதாகும். இதற்கான பீஜாட்சரமானது, ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

* சண்முக ருத்ராட்சம் எனப்படும் ஆறுமுகம் கொண்ட ருத்ராட்சம் கந்தக்கடவுளின் அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் சுக்ரனின் அம்சம் பெற்றது. கலியுகம் சார்ந்த உலக வாழ்க்கை நலன்களைத்தரும் வல்லமை கொண்டது. உடலில் ஜனனேந்திரியங்களின் செயல்பாட்டில் சம நிலையை உண்டாக்கி மனதின் வசீகர சக்தியை மேம்படுத்தக்கூடியது.

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான போக்கு நிலவச் செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. வெகுஜனத் தொடர்பு சாதனங்களில், தொழில் ரீதியாக சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இதை அணிந்து ஜனவசிய சக்தியைப் பெற்று நல்ல பலன்களை அடையலாம். இதற்கான மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம ஆகும்.

* சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம் மகாலட்சுமியின் மங்கல சுபாம்சத்தைக் கொண்டது. நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றியமைக்கக் கூடியது.

நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது. ஏழரைச்சனியின் காலம், அஷ்டமச் சனியின் காலம், அர்த்தாஷ்டமச் சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிரகத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக ருத்ராட்சம் பெரும் துணை புரியும்.

இந்த வகை மணிகளை உடலில் அணிவதைவிட பூஜையறையில் வைத்துத் தினமும் பூஜிப்பதே நல்லது. நீண்ட காலமாகத் தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம். இதற்கான மந்திரம் ஓம் ஹம் நம என்பதாகும்.

* விநாயகப் பெருமானின் அம்சம் கொண்ட அஷ்டமுக ருத்ராட்சமானது எண்முக மணியாகும். நவக்கிரகங்களில் இது ராகுவின் அலைவீச்சைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான, அலையியக்கக் காந்த மண்டல சுழற்சியினை உடையது.

ருத்ராட்சங்களிலேயே மிக, மிகக் கவனமாகச் சோதனை செய்த பின்பே இதை வீட்டில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். உடலில் அணிவது பெரும்பாலும், இந்த மணியின் விஷயத்தில் தவிர்க்கப்படுகிறது. உளவியல் சிக்கல்களுக்குட்பட்டவர்களின் மனநலம் மேம்பட ஒரு குறிப்பிட்ட கால அளவிலும், ஒரு குறிப்பிட்ட முறையிலும் இதை பூஜை செய்து வருவது மிக, மிக நல்லதாகும்.

இந்த மணிகள் வாழ்வியலின் நூதனமான அனுபவங்களைத் தந்து, மனோரீதியான தனிப்பட்ட விளைவுகளால், ஒருவரை அறிவியலின் அடிப்படைகளுக்குட்படாத புதிரான விளைவுகளுக்கு உள்ளாக்கக்கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப் பெற்றவையாகும். இந்த மணிக்குரிய மந்திரமானது ஓம் ஹம் நம என்பதாகும்.

* அன்னை பராசக்தியான ஆத்யா சக்தியின் அம்சம் கொண்டது நவமுக (ஒன்பது முகம்) ருத்ராட்சம். நவக்கிரகங்களில் கேதுவுக்குரியது. இதைப் பெரும்பாலும் சாக்த முறையிலான சக்தி சாதனையின் நெறி நிற்போர், தமது சாதனையின் பூர்த்திக்காக விரும்பி அணிவர்.

இதை அணிந்தால் பொறுமையும், நிதானமும் மனதில் நிலைத்து நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். மேலும், பிற மொழிகளில் நிபுணத்துவம் பெறவும், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கும் இந்த மணி பெரிதும் உறுதுணை புரிகிறது.

கேது கிரகத்தின் கெடுபலன்களான கீழே விழுந்து அடிபடுதல், கடும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட கனவுகள், புரியாத உடல் நிலைக் கோளாறுகள் ஆகிய சங்கடங்களைச் சரியாக்கும் தன்மையை உடையது இந்த ருத்ராட்சம். இதற்கான மந்திரம், ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

* தசமுக (பத்து முகம்) ருத்ராட்சமானது மகாவிஷ்ணுவின் அம் சம் பொருந்தியது. தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. இதற்கான மந்திரம் ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். இந்த மணி ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்றுத்தருவதாக நம்பிக்கை. ஏகாதச ருத்ராட்சமானது பதினோரு முகங்களைக் கொண்டதாகும்.

ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் பெற்ற இந்த மணி, மனதின் ஆற்றலைப் பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரிய விரதத்தில் நிலைபெற விரும்புவோர் இதனையணிந்து நற்பயன் பெறலாம். இதற்கான மந்திரம் ஓம் ஹ்ரீம் ஹம் நம என்பதாகும்.

* துவாதச ருத்ராட்சம் எனப்படும் பன்னிருமுக ருத்ராட் சம், சூரிய பகவானின் திருவருளைப் பெற்றுத்தரக்கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மிக பலம் வேண்டுவோர் இம்மணியை அணியலாம். இதன் மந்திரமானது ஓம் க்ரௌம் ஷெளம் ரௌம் நம.