மார்கெடிங் VS சேல்ஸ்
மார்கெடிங் – சேல்ஸ் வித்தியாசம்.
பொதுவாக, நாம் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையையும் சேல்ஸ் என்ற
வார்த்தையையும் ஒரே அர்த்தத்தோடு பயன்படுத்துகிறோம். ஆனால் இவை இரண்டும் வேறு.
மார்கெடிங் என்பதற்கு தமிழில் ஒரு அழகான வார்த்தை உண்டு. அது “சந்தைப்படுத்துதல்”.
சந்தைப்படுத்துதலில் இரண்டு நிகழ்வுகள் உண்டு. அவை ‘தெரியப்படுத்துதல்’ மற்றும் ‘நினைவூட்டுதல்’.
விளம்பரம் செய்தல் ஒரு மார்க்கெட்டிங் நிகழ்வு.
தெரியப்படுத்துதல்: விளம்பரம் மூலம் நமது பொருள் அல்லது
சேவையைப் பற்றி நாம் வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தலாம். எங்கெல்லாம் நமது
பொருள் அல்லது சேவை கிடைக்கும், அவற்றை எப்படி அடையலாம் என்பதையும் நாம்
தெரியப்படுத்தலாம். மற்றுமொரு தெரியப்படுத்துதல் உக்தி, merchandaising
என்பார்கள். அதற்கு, வாடிக்கையாளருக்கு கண்ணில் தெரியும்படி நமது பொருள் அல்லது
சேவையை காட்சிப் படுத்துதல். இதற்காகத்தான் கடைகளில் பொருட்களை அழகுபடுத்தி
காட்சிப்படுத்துவார்கள். இது வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
நினைவூட்டுதல்: இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு நிறைய விஷயங்கள் முக்கியத்துவம்
பெற்று அவர்களை ஓட வைக்கிறது. அதில் நம்முடைய சேவை அல்லது பொருளைப் பற்றிய நினைவு
அடித்துச் செல்லப்பட்டு அவர்களுடைய மூலையில் கிடப்பில் போடப்பட்டு விடுகிறது.
தொடர்ந்து விளம்பரம் செய்வது, நினைவூட்டுவதர்க்குத் தான். சில
விளம்பரங்கள் துவக்கத்தில் அதிக நேரம் வரும். பின்னர் அவர்கள் விளம்பர நேரத்தை
குறைத்துவிடுவார்கள். இது நினைவூட்டுதலுக்கு ஒரு நல்ல உதாரணம். ஏனென்றால், நாம்
முன்னம் பார்த்த அல்லது கேட்ட அதே விளம்பரம் மூலம், நமக்கு அதில் வரும் வார்த்தை,
குரல் அல்லது இசை தெரிந்து இருக்கும். அதில் ஒரு சிறு பகுதியை நாம் கேட்ட உடனேயே
அந்த பொருள் அல்லது சேவை நினைவுக்கு வரும்.
சில உக்திகள்: (சுயதொழில் புரிபவர்களுக்கு)
தினம் ஒரு தகவல் என நீங்கள் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
வாரம் ஒரு தகவல் என நீங்கள் ஈமெயில் அனுப்பலாம்.
மாதம் ஒருமுறை செல்போனில் அழைத்து பேசலாம்
முக்கிய நாட்களில், (பிறந்த நாள், திருமணநாள், பண்டிகைநாள்) நேரிலோ,
தொலைபேசியிலோ அழைத்து வாழ்த்து சொல்லலாம்.
புதிய பொருள் அல்லது சலுகைகள் வரும் சமயம் அவர்களுக்கு
தெரியப்படுத்தலாம்.
“எப்போதும் உங்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்பிலேயே இருங்கள்”
சேல்ஸ்: சேல்ஸ் என்பது விற்பனை. இது சந்தைப் படுத்துதலுக்கு அடுத்த செயல்.
அதாவது, தகவலை தெரிவித்த பின்னர், உங்கள் வாடிக்கையாளரை அணுகி, அவரிடம் உங்கள்
பொருள் மற்றும் சேவையை விளக்கி அந்த பொருள் அல்லது சேவை அவருக்கு எவ்வாறு உதவும்
அல்லது தேவை என்பதை விளக்கி, அவருக்கு அதை கொடுத்து, அதற்கு பதிலாக பணம் பெரும்
நிகழ்வே விற்பனை.
இதில் எங்கு குழப்பம் வரும் என்றால், சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனைக்கான வித்தியாசம் தெரியாமல் ஏதாவது ஒன்றை மட்டுமே நாம் தொடர்ந்து செய்வதன் மூலம் நமக்கு பலன் முழுவதும் கிடைக்காது. இதனாலேய பல தொழில்கள் வெற்றி அடைவதில்லை. இரண்டையுமே தொடர்ந்து செய்வதுதான் ஒரு சிறந்த வழி.
No comments:
Post a Comment