ஆளுமை
என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் personalityஎன்று தான் சொல்கிறார்கள். அது
சரி யான வார்த்தைதான். ஆனால், personality என்பதை பெரும்பாலானவர்களிடம்
கேட்டுப் பாருங்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் வேறொன்றாக இருக்கு ம்.
ஆளுமை என்பது ஒருவரை மற்றவர்களிடமிரு ந்து பிரித்துக் காட்ட க்கூடியது.
ஒருவன் தனது தனித்தன்மை வாய்ந்த நடத்தை யால் தன்னை சூழ்நி லைக்கு ஏற்ப அமை த்துக் கொள்தே ஆளுமை எனப்படுகிறது.
இந்த ஆளுமையைப் பற்றி உளவியல் வ ல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தெரி யுமா?
ஒரு தனி மனிதனின் தனித்தன்மையான நடத்தையினையும் சிந்த னையையும் முடிவு செய்கின்ற அவனுடைய உள, உடல் அமைப்பே ஆளுமை எனப்படுகி றது. —- Alfred
ஒரு தனிமனிதனுக்குரிய உள செயல்பாடுக ளும் உளநிலைகளும் கொண்ட மொத்த அ மைப்பே ஆளுமை. -- Lindon
சரி,இவர்களுக்கெல்லாம்முன் வந்த உளவியலின் தந்தை என்று போற்றப்படக் கூடிய •பிராய்டு சொன் னதை ப் பார்ப்போம்.
•பிராய்டு மனதை மூன்று பகுதிகளாகப்பிரித்தா ர். இது ஒருவசதிக்காக என்றும்சொல்லி விடு கிறார்.
அவர் பிரித்து வை த்தவை, Id, Ego மற்றும் Super Ego. இம்மூன்று வகையான உள
அமைப் புகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் இயக்க ஆற்றலே ஆளுமை .
Id (இட்)
நிச்சயம்
இதை ஐடி என்று படிக்க வேண்டாம். இது மெயில் ஐடி இல்லை. இதை இட் என்றே
சொல்கிறார். ஆங்கிலத்திலேயே இதற்கு இணையான வார்த்தை ஒன்று இருக்கிறது.
Instinct. இட் என்பது உணர்வுந்தல். ஒரு மனித னின் ஆதார சக்தி, தேவை,
உந்துதல் எல்லா மே இதுதான். தன்னை அறியாமலே உணர்ச்சி ஆவேசம் கொள்ளும்
நிலைமையைத்தான் இட் குறிக்கிறது.
இது தனது சுய தேவையினை பூர்த்தி செய்து கொள்ளுதல். பகுத்தறி வற்றதன்மை,
திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட் படுதல். இந்த உணர்வுந்தல் என்பது இன்ப
க்கொள்கையின் அடிப்படையில் செயல் படுகிறது. இன்பத்தை நாடும் அனைத்து வகை
உந்துதல்களுக்கும் கட்டுப்பாடி ன்றி தாராளமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
இட்-டின் முதன்மையான நோக்கம் உடன டி இன்பம்தான். பிறப்பின்போது குழந்தை யிடம் அடிப்படை ஆளுமையாக இருப்பது இட்
மட்டும்தான். இட்-டுக்கு நீதி தெறியெல்லாம் தெரியாது. எப் போ தும்
இன்பம்தான் இதற்கு ஒரே குறி. சொல்லப்போனால் மனத்தின் குரங்குத்தனமெல்லா ம்
இதிலிருந்துதான் வருகிறது.
இந்த உணர்வுந்தலில் இருந்தே Ego-வும் Super Ego-வும் பிற்காலத்தில் வளர்ச்சி அடைவதாகச் சொ ல்கிறார்.
Ego (ஈகோ)
மனசாட்சி
போன்றது இந்த Ego. வெளியுல கத்துடன் மிகவும் கவனமாக செயல்படக் கூடியது.
ஒரு காரியத்தை செய்யும்போது அந்த வேலையைச் செய்யலாமா? செய்யக் கூடாதா?
என்று தர்க்க ரீதியாக சிந்திக்கக் கூடியது இந்த Ego.
நாகரிக
உணர்வின் அவசியத்தால் உண்டாக்கிய பண்பாட்டுணர்ச்சிதான் இந்த Ego. உடல்வேட்
கைகளுக்கும் சமுதாயக் கட்டுப்பாடுக ளுக்கும் இடையில் மனித நடத்தையை
சமனப்படுத்தி வைப்பதுதா ன் இதன் வேலை. புத்திசாலித்தனம், ஒழுங்கு என்று
சொல்லப்படும் வார்த்தைகள் பண்பாட்டுணர்ச்சியின் தன்மையே. அதிக இன்பம் கு
றைந்த துன்பம் என்ற நிலைப்பாட்டில் செயல்படுவ தே இதன் செயல் முறை.
Super Ego ( சூப்பர் ஈகோ)
நெறிமுறையுடன் அமைந்த உயர்ந்த நிலை செயல்பாடே இந்த Super
ego. ஒருவரின் நடத்தை சரி யானதா தவறானதா என்பதை முடி வு செய்து அதற்கு
ஏற்ப அவருடைய நடத்தையை சீர்படுத்தும் பணி Super ego-வுடையது.
Id
என்பதுஇன்பத்தை நாடுவதிலும், Ego என்பது உண்மை நிலையினை ஆராய்வதிலும்,
Super ego என்பது சரியான செயல்பாட்டினை நாடுவதிலும் ஈடுபட்டு செயல்படுகின்ற
ன.
இந்த Super ego-வ்ன் முக்கிய பணிகள் மூன்று.
1. சமூகத்துக்குப் புறம்பான செயல்க ளில் Id ஈடுபடும்போது அதனை த் தடுப்பது
2. உண்மை நிலைக்கு பதில் நியாய மான குறிக்கோள்கள் செயல்பட Ego -வினைத் தூண் டுவது
3.எந்த ஒரு காரியத்தையும் சரியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் வகை யில் செயல்படுவது.
ஒரு
குழந்தை முதல் ஐந்து வருடத்துக்குள் பல வித மான நிலைகளைக்கடக்கிறது.
இந்நிலைகள்தான் ஒருவரின் பின்னாளைய ஆளுமையைத் தீர்மானிக் கின்றன. இந்தக்
கட்டங்களில் ஏதாவது தேக்கம் ஏற் பட்டால் அது ஆளுமைக் கோளாறைத் தோற்றுவிக்
கும் என்று சொல்கிறார் •பிராய்டு.
இந்த நிலைகளை அவர் பின்வருமாறு பிரித்தார்.
The oral stage
The anal stage
The phalic stage
The genital stage
No comments:
Post a Comment